செய்திகள்
தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்
தலைமை பதவியை துறந்த பாபர் அசாம்
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த தோல்விகள் காரணமாக அணியின் தலைவர் பாபர் அசாம் தலைமை பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுக்கொள்ளாது போட்டித் தொடரிலிருந்து வெளியேறியிருந்தது.
எவ்வாறெனினும், உலகின் போட்டியில் அடைந்த தோல்வியை தொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 அணிகள் உள்ளிட்ட சகல விதமான அணிகளின் தலைமை பதவியிலிருந்தும் விலகிக் கொள்வதாக பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
இது கடினமான தீர்மானம் என்றாலும் பொருத்தமான தருணத்தில் தாம் இந்த தீர்மானத்தை எடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு உதவி செய்த பயிற்றுவிப்பாளர்கள் அணி முகாமைத்துவம் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாகவும் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
உலக கிண்ண போட்டி தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவியது.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் பாகிஸ்தான் அணியை வழிநடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.