செய்திகள்

விராட் கோலி முதலிடம்: பின்தள்ளப்பட்ட தென்னப்பிரிக்க வீரர்

Published

on

விராட் கோலி முதலிடம்: பின்தள்ளப்பட்ட தென்னப்பிரிக்க வீரர்

இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ண தொடரின் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் தென்னப்பிரிக்காவின் டி கொக்கினை (591) பின்தள்ளி 594 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்

இந்தியாவின் முன்னாள் அணி தலைவரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி 290 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,677 ஓட்டங்களை குவித்துள்ளார்.

35 வயதான கோலி சச்சின் பெற்ற 49 ஒருநாள் சதத்தினை சமீபத்தில் சமன் செய்து புதிய மைல்கல்லை எட்டினார்.

இந்நிலையில் உலக கிண்ண தொடரின் போட்டியின் கடைசி சுற்று போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா துடுப்பாட்டதை தேர்வு செய்தது.

இந்தப் போட்டியில் தனது 71வது அரைசத்தினை நிறைவு செய்து ஆட்டமிழந்தார் விராட் கோலி.

51 ஓட்டங்களை எடுத்திருந்த வேளையில் வொன் டெர் மெட்டின் ஓவரில் அவர் ஆட்டமிழந்திருந்தார்.

மேலும், தென்னப்பிரிக்காவின் டி கொக்கினை (591) பின்தள்ளி 594 ஓட்டங்களுடன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

மீதமிருக்கும் அரையிறுதிப் போட்டியில் வென்றால் இறுதிப்போட்டியிலும் சிறப்பாக விளையாடினால் ஒரே உலகக் கிண்ண தொடரில் சச்சின் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களை (673) கோலியினால் எளிதில் அடைய முடியும் என கிரிக்கெட் ஆர்வளர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version