செய்திகள்

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன்

Published

on

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் குறித்து முத்தையா முரளிதரன்

எதிர்வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் நவம்பர் 19 ஆம் திகதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இம்முறை உலகக்கிண்ணத் தொடரை இந்தியா நடத்தவுள்ளதுடன், போட்டியில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கவுள்ளன.

இந்த நிலையில், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் வெற்றி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐசிசி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும். ஏனெனில் அவர்கள் சிறந்த அணி. மேலும் சொந்த மைதானங்களில் சாதகமான சூழ்நிலை உள்ளது. அத்துடன் கோடிக்கணக்கான கிரிக்கெட் இரசிகர்களின் ஆதரவும் உள்ளதுடன், இவை இந்திய வீரர்களுக்கு ஊக்கமளிக்கும்.

இதற்கு அடுத்த படியாக அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தானும் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version