விளையாட்டு
தங்களது திறனை 90 % வெளிப்படுத்த வேண்டும் – வலியுறுத்தும் டோனி


டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் 16-ம் திகதி தொடங்கி நவம்பர் 13 வரை நடைபெற இருக்கிறது.
இந்த போட்டி வரும் 23-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் நிறுவனமான ஷேகா ஹாரி நிறுவனத்தின் நிகழ்வில் தோனி பங்கேற்றார். டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்து பேசியுள்ளார்.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டி நாளன்றும் இந்திய அணி வீரர்கள் தங்களது திறனை 80 முதல் 90 சதவீதம் வரை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் தோனி.
அதே நேரத்தில் எதிரணியின் பவர் ஹீட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு அந்த நாள் மோசமானதாக அமைய வேண்டும் என்றும் இது நடந்தால் இந்திய அணிக்கு வெற்றிதான் என்றும் தெரிவித்துள்ளார்.