இலங்கை
தேசிய வலுத்தூக்கல் 2022 – ஒரே நாளில் மூன்று தேசிய சாதனைகளை தன்வசப்படுத்திய சாவகச்சேரி இளைஞன்
நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தேசிய வலுத்தூக்கல் – 2022 (Powerlifting) போட்டியில் மூன்று தேசிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் சாவகச்சேரி இளைஞன்.
இலங்கை வலுத்தூக்கல் சம்மேளனத்தால் நடாத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வலுத்தூக்கல் போட்டியில் வட மாகாணம் சார்பில் பங்குபற்றிய யாழ்ப்பாணம்- தென்மராட்சி – சாவகச்சேரியைச் சேர்ந்தவரும் JK Fitness அங்கத்தவருமாகிய புஷாந்தன் மூன்று தேசிய சாதனைகளை ஒரே நாளில் நிகழ்த்தியுள்ளார்.
120kg க்கு மேற்பட்ட எடைப்பிரிவில் Squat 330kg, benchpress 175kg மற்றும் deadlift 261kg ஆகிய எடைகளைத் தூக்கி தேசிய ரீதியில் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் குறித்த இளைஞன்.
இதேவேளை Squat 330kg மற்றும் deadlift 261kg எடைகளை தூக்கியதன் மூலம் தேசிய சாதனை நிகழ்த்தியுள்ள அதேவேளை ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் இவரால் முறியடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மொத்த வலுத்தூக்கலிலும் 766 kg எடையை தூக்கிய நிலையில் மேலதிகமாக தேசிய ரீதியிலான சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது.
தன் கனவுகளை நோக்கிய பயணத்தில், சாதாரண குடும்பத்திதை சேர்ந்த புஷாந்தன் ஒவ்வொரு தடைக்கல்லையும் படிக்கல்லாக மாற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் வலுத்தூக்கல் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் சாதனை புரிந்த ஒரே ஒரு தமிழ் இளைஞன் புஷாந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#Sports
You must be logged in to post a comment Login