விளையாட்டு
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – ICC பெரும் பிரயத்தனம்
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் – ICC பெரும் பிரயத்தனம்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டைச் சேர்த்துக்கொள்வதற்கான முயற்சிகளை சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) மேற்கொண்டுள்ளது.
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்த்துகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைவர் கிரேக் பார்கிலே தெரிவித்தபோது-
அமெரிக்காவில் 30 மில்லியன் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள். இதனால் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் பங்கேற்பது பொருத்தமாக இருக்கும். இது அவ்வளவு எளிதல்ல. ஒலிம்பிக்கில் பல அற்புதமான விளையாட்டுகளை இணைத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் கிரிக்கெட்டைச் சேர்க்க இதுவே சரியான நேரம். ஒலிம்பிக்ஸும் கிரிக்கெட்டும் நல்ல கூட்டணியாக அமையும் – என்று கூறினார்.
இதற்கு முன்பு 1900ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக்கில் மட்டுமே கிரிக்கெட் பங்கேற்றுள்ளது. அதிலும் இங்கிலாந்தும் பிரான்சும் மட்டும் விளையாடின.
இதனால் 128 வருடங்களுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சேர்க்க ஐ.சி.சி. முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அடுத்த வருடம் பர்மிங்கமில் நடைபெறவுள்ள 2022ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது.
ஜப்பானில் நடைபெற்று வந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. அடுத்த ஒலிம்பிக் 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறவுள்ளது.
You must be logged in to post a comment Login