image 2026 01 08 194242143
செய்திகள்இலங்கை

ரமலான் காலம்: முஸ்லிம் அரச ஊழியர்களுக்கு வேலை நேரங்களில் சலுகை – அரச நிர்வாக அமைச்சு அதிரடி உத்தரவு!

Share

புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம் அரச ஊழியர்கள் தங்களது மத வழிபாடுகளைச் சிரமமின்றி மேற்கொள்வதற்கு வசதியாக, வேலை நேரங்களை (Work Shifts) ஒழுங்குபடுத்தி வழங்குமாறு சகல அரச நிறுவனங்களுக்கும் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

எதிர்வரும் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் மார்ச் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள ரமலான் காலத்தில், முஸ்லிம் ஊழியர்களின் மதக் கடமைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவர்களது வேலை நேரங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத அவசியமான சந்தர்ப்பங்களில் மாத்திரம் முஸ்லிம் ஊழியர்களுக்கு விசேட விடுமுறைகளை வழங்க அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

தகுதியுள்ள சகல முஸ்லிம் அதிகாரிகளுக்கும் ரமலான் பண்டிகை முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன்னதாக பண்டிகை முற்பணத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவானது சகல அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்கள், அரசியலமைப்புச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் அரச ஊழியர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
sri lankan buddhist monks participate all night 440nw 10583135b
செய்திகள்இலங்கை

தேரர்களை இழிவுபடுத்த வேண்டாம்: சைபர் தாக்குதல்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

மிஹிந்தலை ரஜமஹா விகாராதிபதி உள்ளிட்ட மகா சங்கத்தினரை இழிவுபடுத்தும் நோக்கில் சமூக வலைதளங்கள் வாயிலாக முன்னெடுக்கப்படும்...

26 69648efcbd42c
செய்திகள்அரசியல்இலங்கை

பாதுகாப்புத் தரப்பிடம் மண்டியிட்டதா அநுர அரசாங்கம்?: புதிய பயங்கரவாத சட்ட வரைவுக்கு சுமந்திரன் கடும் எதிர்ப்பு!

தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) எனும் புதிய சட்ட வரைவானது,...

download 1
செய்திகள்இலங்கை

பத்தரமுல்லையில் கார்களை வாளால் தாக்கிய இளைஞர்: ஜனவரி 22 வரை விளக்கமறியல்!

பத்தரமுல்ல – தியத உயன மற்றும் எத்துல் கோட்டை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு,...

images 9 2
செய்திகள்அரசியல்இலங்கை

விடைபெறும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு!

இலங்கைக்கான தனது இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்பவுள்ள அமெரிக்கத் தூதுவர் ஜூலி...