பிரியந்த குமார கொலை! – 249 பேர் கைது

Arrested 611631070

பாகிஸ்தானில் வைத்து இலங்கையரான பிரியந்த குமார கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை 249 பேர் அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் – என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” பாகிஸ்தானிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசேட ஏற்பாடுகளின்கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வழக்கு விசாரணை நாளாந்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.” – என்றும் அவர் கூறினார்.

#SriLankaNews

Exit mobile version