ஆப்கானிஸ்தானில் இன்று (நவ 03) அதிகாலை சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நில அதிர்வு இந்துகுஷ் மலைத்தொடர் அருகே உள்ள பல்ஹா (Balkh) மாகாணத்தில் ஏற்பட்டது. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், இந்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 6.0 ஆகப் பதிவான நில அதிர்வில் சுமார் 2,200 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.