ஒன்பிளஸ் தனது புதிய சாதனம் ஒன்றை வெளியுலகிற்கு தெரியாமல் மர்மமாக தயாரித்து வருகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் சத்தமின்றி உருவாக்கி வரும் புதிய சாதனம் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளிவர தொடங்கியுள்ளன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ். பற்றிய தகவல்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய சாதனம் பற்றிய விவரங்கள் மர்மமாகவே இருந்து வந்த நிலையில் இது விரைவில் அறிமுகமாக இருக்கும் ஒன்பிளஸ் 9ஆர்.டி. மாடல் இல்லை எனவும், இந்த சாதனம் ஐ.வி.2201 எனும் குறியீட்டு பெயர் கொண்டிருக்கிறது.
இவ்வகையில் இந்த சாதனம் புதிய நார்டு மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இது நார்டு சி.இ. மாடலின் மேம்பட்ட வெர்ஷனா அல்லது புதிய ஒன்பிளஸ் சாதனமா என்பது குறித்து இதுவரையும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்படவில்லை.
ஒன்பிளஸ் நிறுவனத்தால் சமீபத்தில் நார்டு 2 மாடல் அறிமுகம் செய்யப்பட்டதால், உடனடியாக மற்றொரு நார்டு ஸ்மார்ட்போன் அறிமுகமாகுமா என்பதும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒ ன்பிளஸ் நிறுவனத்தின் புதிய சாதனம் பி.ஐ.எஸ் இன் மர்மம் வெகுவிரைவில் துலங்குமென அந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#TECHNOLOGY