12566ad0 280b 11f0 8f57 b7237f6a66e6.jpg
செய்திகள்உலகம்

நெதன்யாகுவை அமெரிக்கா சிறைபிடிக்க வேண்டும்; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் ஆவேசம்!

Share

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை “மனிதகுலத்தின் மிக மோசமான குற்றவாளி” என விமர்சித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அவரை அமெரிக்கா கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானியத் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் கவாஜா ஆசிப் அவர், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைச் சிறைபிடித்ததைப் போல, அமெரிக்காவிற்கு உண்மையில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை இருந்தால், நெதன்யாகுவையும் அவர்கள் ‘சிறைபிடிக்க’ வேண்டும்.

துருக்கி நாடு நினைத்தால் நெதன்யாகுவைக் கடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்காகப் பாகிஸ்தானியர்கள் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 4,000 – 5,000 ஆண்டு கால வரலாற்றில், காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு இணையான அத்துமீறல்களை எந்தவொரு சமூகமும் செய்ததில்லை என அவர் வாதிட்டார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன விவகாரத்தில் பாகிஸ்தான் நீண்டகாலமாக இஸ்ரேலைக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இருப்பினும், ஒரு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் சர்வதேசத் தலைவரை “மிகப்பெரிய குற்றவாளி” என வெளிப்படையாகச் சாடியிருப்பது இராஜதந்திர ரீதியாகப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...