நாமல் ராஜபக்ஷ: தனக்கும் SLPP உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட வாகனங்கள் தேவையில்லை – சுகாதார அமைச்சுக்கு ஒப்படைக்க முடிவு!

25 6914c3f00b61f

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனக்கும் தனது சக SLPP நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒதுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வாகனங்கள் தேவையில்லை என நேற்று (நவம்பர் 11) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

மூன்று வாகனங்களையும் சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கை நாட்டின் சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதற்கான ஆதரவின் அடையாளமாக எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் மேலும் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்:

“ஜனாதிபதி எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் ஹிட்லர் போன்று கத்துகின்றார் ஆனால் ஐ.எம்.எப் (IMF) பிடம் மட்டும் பூனை போல் இருக்கின்றார். ஹிட்லர் அவருடைய சர்வாதிகாரத்தாலே அழிந்தார் என்பதை ஜனாதிபதி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.”

“சர்வதேச நாணய நிதியத்தை விரட்டுவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார். ஆனால் எங்களுக்கு போடும் சத்தத்தை சர்வதேச நாணய நிதியத்திற்குப் போடுவதில்லையே. மக்களுக்கு அநீதியாக வரி அறவிட வேண்டாம். பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் சர்வதேச நாணய நிதியத்திடம் கூறுங்களேன். அதைக் கூறமாட்டார்” என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

Exit mobile version