ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
வஜிர அபேவர்தனவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.
எம்.பியான பின்னர் வஜீரவுக்கு முக்கிய அமைச்சு பதவியொன்று வழங்கப்படவுள்ளது.
#SriLankaNews