16 32
இலங்கைசெய்திகள்

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

Share

இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

இலங்கை (Srilanka) அணிக்கும் நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இடையிலான இருபதுக்கு 20 ஓவர் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் நியூசிலாந்து அணி சார்பில் மார்க் சேப்மன் (Mark Chapman) அதிகபட்சமாக 42 ஓட்டங்களையும் Tim Robinson மற்றும் Mitchell Hay ஆகியோர் தலா 41 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் வனிந்து அசரங்க (Wanindu Hasaranga) 02 விக்கெட்டுக்களையும், நுவன் துஷார (Nuwan Thushara), மதீஷா பத்திரன (Matheesha Pathirana) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர்.

இதன்படி இலங்கை அணிக்கு 187 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியானது ஒருநாள் மற்றும் ரி20 விளையாடுதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையில் 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என்பன நடைபெறவுள்ளன.

அதன் படி முதல் தொடராக ரி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி இன்று இலங்கை நேரப்படி முற்பகல் 11.45 மணிக்கு மவுங்கானுவில் அமைந்துள்ள பேய் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் என்ற முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

Share
தொடர்புடையது
1765079066 25 693273715360b md
இலங்கைசெய்திகள்

கண்டி – கொழும்பு ரயில் பயணிகளுக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள்!

கண்டி ரயில் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக, நாளை (டிசம்பர் 8) காலை...

image 49051e3a6e 1
இலங்கைசெய்திகள்

நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி: “மகிழ்ச்சியாகத் தூங்கப் போனோம், மண்ணுக்குள் புதைந்தோம்” – தப்பியோர் அதிர்ச்சிப் பேட்டி!

மடுசீம பூட்டாவத்த பகுதியில் ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்த...

images 19
இலங்கைசெய்திகள்

அனர்த்த உயிரிழப்புகள் 627 ஆக உயர்வு: கண்டி மாவட்டத்தில் அதிக பாதிப்பு! 

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627...

image f1250cea24
அரசியல்இலங்கைசெய்திகள்

பூஸா சிறையில் அதிரடிச் சோதனை: 2 ஸ்மார்ட் போன்கள், 13 சிம் கார்டுகள் பறிமுதல்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போது 2 ஸ்மார்ட் தொலைபேசிகள், 13 சிம்...