மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலை!! கல்வி அமைச்சரின் அறிவிப்பு

tamilni 182

பாடசாலை பாடப்புத்தக விநியோகம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(09) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புதிய கல்வி தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடப் புத்தக விநியோகம் பூரணப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version