தென் கொரியப் புலம்பெயர் இலங்கையர் உதவி: 48 மணி நேரத்தில் திரட்டப்பட்ட ரூ. 38.43 மில்லியன் நிவாரண நிதி பிரதமரிடம் கையளிப்பு!

22 61ea2c4754d53

தென் கொரியாவில் தொழில்புரியும் இலங்கையர்களால் திரட்டப்பட்ட 38.43 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதி, இலங்கையில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக இன்று (டிசம்பர் 9) பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிதித் திரட்டல் முயற்சியைத் தென் கொரியாவின் ஜியோன்ஜு (Jeonju) நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இலங்கையர் ஒருவரே வழிநடத்தியுள்ளார்.

தென் கொரியாவில் உள்ள இலங்கை வெளிநாட்டு ஊழியர்கள் மற்றும் வர்த்தக உரிமையாளர்கள், அவர் தனிப்பட்ட முறையில் விடுத்த உதவிக்கான கோரிக்கையை நம்பி அளித்த நன்கொடைகள் மூலம் வெறும் 48 மணி நேரத்தில் இந்த நிதி திரட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தொகை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.

Exit mobile version