தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
ஜப்பானில் (Jaffna) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில், தமிழ் மக்கள் நீண்ட காலம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது வட மாகாணத்தில் தேவைக்கு அதிகமாக உள்ள இராணுவத்தைக் குறைக்கப் போவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மற்றும் இலங்கையை ஒரு மதபேதமற்ற நாடாக மாற்றுவதுடன் நாட்டில் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதே தனது பிரதான குறிக்கோள்.
எனினும், தென்னிலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகள் இன்னும் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் அதற்கு ஒருபோதும் தனது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது.
அதுமட்டுமின்றி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பின்னர் ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான விஜயத்தை மேற் கொண்டிருந்தார்.
ஜப்பான் சென்ற அவர் ஜப்பானின் பேரரசர் நருஹிட்டோ உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

