அவசர நிவாரணம் வழங்கிய அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி!

25 6938115554743

நாட்டில் ஏற்பட்ட பேரிடர் நிலைமைக்கு மத்தியில் இலங்கையுடன் நின்று, தேவையான உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்காவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டு அவர் இவ்வாறு நன்றியை வெளிப்படுத்தியுள்ளார்.

தேவையான நேரத்தில் தக்க உதவிகளை வழங்கியமைக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் (Donald Trump) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாகப் பேரிடர் நிலைமைக்கு இலங்கை முகங்கொடுத்த சந்தர்ப்பத்தில், அமெரிக்கா விரைவாக C-130 வகையிலான இரண்டு நிவாரண விமானங்களை இந்நாட்டிற்கு அனுப்பியதுடன், இரண்டு மில்லியன் டொலர் (US$ 2 Million) அவசர நிதி நிவாரணத்தையும் வழங்கியிருந்ததாக அந்தப் பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பதிவில்,”இவ்வாறு பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் உறுதியாக வேரூன்றிய நமது நீடித்த கூட்டாண்மையின் வலிமையையும், நமது மக்களிடையேயான நெருங்கிய உறவுகளையும் இது பிரதிபலிக்கிறது.”குறிப்பிட்டுள்ளார்

Exit mobile version