பிரபாகரன் ஆஸ்திரேலியாவில்!! – காங்கிரஸ் மூத்த தலைவர் வேலுச்சாமி தகவல்

velusamy

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவர் உயிரோடு ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார். இவ்வாறு
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்துள்ள அவர்,

நந்தி கடலில் மரணம் அடைந்து இரவு முழுவதும் சடலமாக பிரபாகரன் மிதந்ததாக இலங்கை அரசு கூறுகிறது. அப்படி மிதந்திருந்தால் அந்த சடலத்தின் கண்கள் மீன்களால் சிதைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தின் கண்கள் திறந்த நிலையில் தெளிவாக இருந்தன. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

விடுதலைப்புலிகள் யாரும் தங்கள் சீருடையில் பெயரை குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அந்த பழக்கம் அவர்களிடம் இல்லை. ஆனால் இலங்கை ராணுவம் காட்டிய பிரபாகரன் உடலில் இருந்த சீருடையில் அவரது பெயர் இருந்தது. அதனால் அது பிரபாகரனே இல்லை. அந்த ஏற்பாட்டை செய்தவர்கள் ஏதோ நோக்கத்துக்காக செய்துள்ளனர். – என்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமாகவே உள்ளார் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ள நிலையில், தற்போது பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SriLanka #India

 

Exit mobile version