பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

25 6908adfc6e76f

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டத்தை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் இதற்கான திட்டங்கள் செயற்படுத்தப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார். சிறார்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதன் அவசியத்தை அவர் இதன் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version