24 670098eada9d6
இலங்கைசெய்திகள்

இந்தியாவினால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்மை திட்டங்கள்

Share

இந்தியாவினால் இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட நன்மை திட்டங்கள்

இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கைக்கு இரண்டு முக்கிய நன்மை திட்டங்களை அறிவித்துள்ளார்.

அவர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேற்று சந்தித்ததினை தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஹேரத்துடனான சந்திப்பின்போதே இந்தியாவின் நன்மைத்திட்டங்களை அறிவித்துள்ளார்.

இதன்போது,இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களின் மூலம் இலங்கைக்கான இந்தியாவின் தற்போதைய அபிவிருத்தி உதவிகள் தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் காங்கேசன்துறை துறைமுகத்தை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் மூலம் நவீனமயமாக்க இந்தியா முன்வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் 7 தவணைகள் செலுத்தி முடிக்கப்பட்ட கடன் வரித் திட்டங்களுக்கான 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக மாற்றலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை தொடருந்து சேவைக்கு 22 டீசல் இயந்திரங்களை அன்பளிப்பாக வழங்கவும் இந்தியா முடிவு செய்துள்ளதாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின்போது, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கைப் பிரதேசத்தைப் பயன்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார வலியுறுத்தியதாகவும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் தொடர்பான விடயமும் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது அவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை விடுவிக்கவும், அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடுமையான அபராதத்தை மறுபரிசீலனை செய்யவும் ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமாரவை வலியுறுத்தினார்.

இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பான கருத்தாடலின்போது, இலங்கையின் ஒற்றுமை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளையில் சமத்துவம், நீதி, கண்ணியம், சமாதானத்திற்கான தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களின் அபிலாசைகளுக்கும் இந்திய அமைச்சர் மீண்டும் இந்தியாவின் ஆதரவை வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...