24 662209a37fc07
இலங்கைசெய்திகள்

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

Share

ஐ.எம்.எப் இன் கொடுப்பனவு : நம்பிக்கை வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர்

சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை கொடுப்பனவை பெறுவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது என பொருளாதார நிபுணர் இந்திரஜித் குமாரசுவாமி (Indrajit Coomaraswamy) தெரிவித்துள்ளார்.

அண்மையில் லண்டனில் (London) நடைபெற்ற பேச்சுவார்த்தைச் சுற்றில் தனியார் பத்திரப் பதிவுதாரர்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்வதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது.

இந்நிலையிலேயே, இந்திரஜித் குமாரசுவாமி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சர்வதேச நாணய நிதியத்தின் 3 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் கீழ் வரும் மூன்றாவது தவணை கொடுப்பனவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

தற்போது பேச்சுவார்த்தைகள் நல்ல நம்பிக்கையுடன் முன்னோக்கி நகர்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மதிப்பாய்வுக்கு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில், நல்ல நம்பிக்கையுடன் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் இருக்க வேண்டும்.

இதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் அந்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆகவே, இந்த விடயத்தை அவநம்பிக்கையுடன் பார்க்கக் கூடாது.

இருப்பினும், பத்திரகாரர்களுடனான பேச்சுவார்த்தைகள் முற்றிலுமாக முறிந்தால், சர்வதேச நாணய நிதியத்தினால் பணியாளர் ஒப்புதல் தாமதமாக்கப்படும்.

மேலும், தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நான்கு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.

எனினும், அவை எதுவும் மறுசீரமைப்பு தொகுப்பின் மையத்துடன் தொடர்புடையவை அல்ல.

எனவே, அரசாங்கம் தனது முன்மொழிவில் முன்வைத்துள்ள அடிப்படை கட்டமைப்பிற்கமைய எந்த பிரச்சினையும் இல்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...