நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள சீரற்ற வானிலை அனர்த்த நிலைமையினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 639 ஆக அதிகரித்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Centre – DMC) இன்று (டிசம்பர் 9) மாலை 6 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையினால் 529,741 குடும்பங்களைச் சேர்ந்த 1,824,771 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், அங்கு 234 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 27,145 குடும்பங்களைச் சேர்ந்த 86,040 நபர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

