இலங்கையின் குரங்கு இறக்குமதி தொடர்பில் சீனா நிலைப்பாடு

tamilni 180

இலங்கையிலிருந்து குரங்குகளை இறக்குமதி செய்வதில் சீனா இன்னும் ஆர்வம் காட்டுவதாக விவசாயம் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு நேற்றைய தினம் (09.01.2024) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“என்னுடைய சமீபத்திய சீன விஜயத்தின் போது அங்கிருந்த தனியார் மிருகக்காட்சி சாலைகள் இலங்கையிடம் இருந்து குரங்குகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டின.

சீனா முழுவதும் ஏறத்தாழ 20,000 மிருகக்காட்சி சாலைகள் காணப்படுவதோடு கண்காட்சிக்காக குரங்குகளை பயன்படுத்தும் நோக்கிலேயே சீன அரசாங்கம் குரங்குகளை இறக்குமதி செய்கிறது.

ஆனாலும், விலங்கு ஆர்வலர்கள் மற்றும் அமைப்புகளால் அரசாங்கத்திற்கு குரங்கு ஏற்றுமதி செயற்பாடுகளை முன்னகர்த்த முடியாதுள்ளது.

மேலும், நாட்டில் ஒரு வருடத்தில் 700 மில்லியன் தேங்காய் உள்ளிட்ட பயிர்கள் குரங்குகளால் நாசமாகின்றன” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version