கெஹல்பத்தர பத்மேவிடமிருந்து கைத்துப்பாக்கி பெற்ற தொழிலதிபர் கைது: 13 தோட்டாக்கள் மீட்பு!

25 686e8302c83b7

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேயிடமிருந்து கைத்துப்பாக்கியைப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், மினுவாங்கொடையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் மினுவாங்கொடையில் உள்ள குறித்த தொழிலதிபரின் வீட்டைச் சோதனை செய்தபோது, ​​துப்பாக்கியுடன் 13 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

விசாரணைகளின் அடிப்படையில், ஹீனட்டியன மகேஷ் என்பவர் குறித்த தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தல் குறித்துத் தொழிலதிபர் கெஹல்பத்தர பத்மேவுக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, தனது பாதுகாப்பிற்காகப் பத்மே, அந்தத் தொழிலதிபருக்குத் துப்பாக்கியை வழங்கியுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தத் துப்பாக்கியைப் பெற்றதற்காகத் தொழிலதிபர் கெஹல்பத்தர பத்மேவுக்கு 350,000 ரூபாய் வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version