பிராந்தியம்
சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று பெண்கள் கைது!!
பேரூந்தில் சென்ற பெண்ணின் தங்கச்சங்கிலியை கொள்ளையிட்ட மூன்று கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மூன்றாம் தடுப்பூசியை செலுத்துவதற்காக குறித்த பெண் தமது சகோதரியுடன் பேருந்தில் பயணித்து ஹிக்கடுவை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு அருகில் இறங்கிய சந்தர்ப்பத்தில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு பின்னால் இருந்து மூன்று பெண்கள் அவரிடம் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ஹிக்கடுவை போக்குவரத்து பொலிஸார் தங்கச் சங்கிலியுடன் தப்பிச்சென்ற மூன்று பெண்களையும் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள், சிலாபம், புத்தளம் பகுதிகளைச் சேர்ந்த 20, 21 மற்றும் 40 வயதுடையவர்கள் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login