சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

8 18

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை வெளியிடும் ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி இவ்வாறு அதிருப்தி கொண்டுள்ளார்.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் நிலந்தி கொட்டஹச்சி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர் ஒருவர், இரண்டு அமைச்சர்கள் ஆகியோரை வரவழைத்து இது குறித்து தனது அதிருப்தியை ஜனாதிபதி நேரடியாகவே வெளிக்காட்டியுள்ளார்.

அத்துடன் மேற்குறித்த அரசியல்வாதிகளை எந்தவொரு காரணத்தைக் கொண்டும் இனிவரும் காலங்களில் ஊடக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விட வேண்டாம் என்று ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பொறுப்பாளர் விஜித ஹேரத் ஆகியோருக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

 

Exit mobile version