இந்தியப் பெருங்கடலில் இன்று (நவம்பர் 01) அதிகாலையில் ரிக்டர் அளவில் 6.0 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதி என்பதால், பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளன.
இதன் காரணமாக, இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை, இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் பதிவாகவில்லை.

