இலங்கை

யுஎஸ்எய்ட்டின் நிதி முடக்கம்: நிதி வழிகளை தேடும் அரச நிறுவனங்கள்

Published

on

யுஎஸ்எய்ட்டின் நிதி முடக்கம் பல அரசு சாரா நிறுவனங்களை மிகவும் வறட்சியான நிலைக்குத் தள்ளியுள்ளது, அதேநேரம் அரசத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

முடக்கம் ஏற்பட்ட நேரத்தில் நான்கு அமைச்சகங்களும் அவற்றின் கீழ் உள்ள பல துறைகளும் யுஎஸ்எய்ட்டின் மானியங்களைப் பெற்று வந்தன.

இந்தநிலையில் அவற்றின் திட்டங்களைத் தொடர பணத்தை தேட வேண்டிய நிலைக்கு அவை தள்ளப்பட்டுள்ளன வெளிவிவகாரத் அமைச்சில் இருந்து பெறப்பட்ட தரவுகளின்படி, 2019 முதல் யுஎஸ்எய்ட், இலங்கை அரசாங்கத் திட்டங்களுக்கு 31 பில்லியன் டொலர்களை நிதியளித்துள்ளது.

இதில், 20.4 மில்லியன் அமெரிக்க டொலர் திட்டங்கள், மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் காலத்தில் கையெழுத்தானது.

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் போது 41.9 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) அரசாங்கத்தின் போது 26 மில்லியன் அமெரிக்க டொலர்களும், அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் போது இதுவரை 18.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குமான திட்டங்கள் கையெழுத்தாகியுள்ளன.

Exit mobile version