இலங்கை
கொழும்பு நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்: பதிலளிக்கப்படாத கேள்விகள்

கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து இன்னும் பல பதிலளிக்கப்படாத கேள்விகள் உள்ளதாக கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் நிர்வாக இயக்குநர் சேனக பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வியடம் தொடர்பில் மேலம்ட தெரிவித்த அவர்,
துப்பாக்கிதாரியும் அவருக்கு ஆயுதம் கொடுத்த பெண்ணும் சட்டத்தரணிகளை போன்று மாறுவேடமிட்டுக் கொண்டமையானது, சட்டத்தரணிகள், சோதனைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட அடிப்படையிலேயே நிகழ்ந்துள்ளது.
எனினும் சம்பவத்தின் பின்னர் அவர்கள் முன் வாயில் ஊடாக தப்பிக்க முடிந்தது? என்பது கேள்வியாக உள்ளது.
எனவே இந்த விடயத்தில் எங்கோ ஒரு முறிவு ஏற்பட்டது என்பது தெளிவாகின்றது.
சம்பவம் இடம்பெற்ற நீதிமன்ற எண் 05 இலிருந்து முன் வாயிலுக்குச் செல்ல சிறிது நேரம் ஆகும்.
இந்த நேரத்தில் நிறைய செய்திருக்கலாம். குறைந்தபட்சம் உடனடியாக வாயிலை மூடிவிட்டு, யாரும் வெளியேறுவதைத் தடுக்க நுழைவாயிலில் ஆயுதமேந்திய படையினரை நிறுத்தியிருக்க முடியும். எனினும் இந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே நீதிமன்ற அறைக்குள் ஏராளமான பொலிஸார், சிறைச்சாலைகள் மற்றும் சிறப்புப் படை அதிகாரிகள், கணேமுல்ல சஞ்சீவவை, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எதுவும் செய்யவில்லை என்று இணையத்தில் பரவி வரும் காணொளியையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தின் நுழைவாயிலில் இன்னும் ஸ்கேனர் கருவி இல்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.