இலங்கை
கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச்சூடு: கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டில் சொகுசு கார்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டிலிருந்து சொகுசு கார் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
புதுக்கடை நீதிமன்றத்தின் 5ஆம் இலக்க நீதிமன்ற அறைக்குள் பாதாள உலகத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அதுருகிரிய பொலிஸ் உத்தியோகத்தரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிமருந்துகள் மற்றும் ஒரு சொகுசு கார் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போர் துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஏழு தோட்டாக்கள், M16 வகை ஆயுதங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு தோட்டா, ஒரு மின்னணு தராசு மற்றும் ஒரு சொகுசு கார் ஆகியவையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.