இலங்கை
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் மூன்றாவது நாள் இன்று

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று (20) நடைபெறவுள்ளது.
அதன்படி, இன்று காலை 09.30 முதல் மாலை 06.30 வரை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் தலைமையில் ஆரம்பமானது.
காலை 09.30 முதல்10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 முதல் மாலை 06.00 வரை 2025 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாலை 06.00 முதல் 06.30 ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 18 ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 25 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து குழுநிலை விவாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.