இலங்கை
இந்த வாரத்திற்குள் நெல்லுக்கு கட்டுப்பாட்டு விலை : வெளியான அறிவிப்பு
நெல்லுக்கான கட்டுப்பாட்டு விலை இந்த வாரத்திற்குள் நிர்ணயிக்கப்படும் என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன
அத்தோடு, நெல் கொள்வனவுக்காக திறைசேரியிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெல்லுக்கான உத்தரவாத விலை விரைவில் அறிவிக்கப்படாவிட்டால் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக விவசாய அமைப்புகளின் பிர திநிதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில், நெல்லுக்கான உத்தரவாத விலை இந்த வாரம் அறிவிக்கப்படும் என வர்த்தக வணிகம் உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.
அத்தோடு, விவசாயிகளின் நெல்லுக்கு உரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனும் (Selvam Adaikalanathan) தனது கோரிக்கையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.