இலங்கை

ஜனாதிபதியின் யாழ் விஜயம் : வெடித்தது புதிய சர்ச்சை

Published

on

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின்(anura kumara dissanayake) யாழ்ப்பாண(jaffna) விஜயம் தொடர்பில் புதிய சர்ச்சை ஒன்று சமூக ஊடகங்களில் வெடித்துள்ளமை தொடர்பில் சிறிலங்கா விமானப்படை(sri lanka airforce) அதற்குரிய விளக்கத்தை அளித்துள்ளது.

இதன்படி ஜனாதிபதி அநுர தனது அண்மைய யாழ்ப்பாண விஜயத்தின்போது சிறிலங்கா விமானப்படையின் மூன்று விமானங்களை பயன்படுத்தியதாக செய்தி ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனினும் இவ்வாறு பரவிய உண்மைக்கு புறம்பான செய்தி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு இன்று (2) பிற்பகல் ஒரு விளக்கத்தை வெளியிட்டது.

அதன்படி, கடந்த 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கான தனது பயணத்திற்காக ஜனாதிபதி சிறிலங்கா விமானப்படை விமானங்களைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்திற்கு சிறிலங்கா விமானப்படையின் எந்த விமானமும் பயன்படுத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாகனம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Exit mobile version