இலங்கை

வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ள ரணில் – சஜித் கூட்டணி

Published

on

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமான கட்டத்தை எட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தலைமைத்துவம் மற்றும் சின்னம் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கான உடன்பாட்டை எட்டுவதே விவாதங்களின் முதன்மை நோக்கம் என்று தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தலைமைத்துவம் மற்றும் சின்னம் தொடர்பான பிரச்சினைகளை பின்னர் போசிக்கொள்ளலாம்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்த பல உறுப்பினர்கள் உள்ளனர்.

வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல்கள் மிக முக்கியமான தேர்தல். அதற்கு முன் ஒரு உடன்பாட்டை எட்டுவதே எங்கள் நோக்கம்.

இந்த ஒப்பந்தத்தில், மற்ற கட்சிகளும் எங்களுடன் சேரலாம். சில சமயங்களில் நாம் உள்ளூராட்சித் தேர்தல்களில் பொதுவான சின்னத்துடன் போட்டியிடலாம்.

இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்ற கருத்துடைய கட்சி உறுப்பினர்கள் உள்ளனர். அதற்காக நாங்கள் ஒரு தொடக்கத்தை எடுத்துள்ளோம்” என்றார்.

Exit mobile version