இலங்கை
கொழும்பில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு!
கொழும்பு மாநகர சபை பகுதியில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபை பகுதிக்கு தினமும் பத்தாயிரம் கிலோகிராம் மாட்டிறைச்சி தேவைப்பட்டாலும், இந்த நாட்களில் விநியோகம் ஐந்தாயிரம் கிலோகிராமாக குறைக்கப்பட்டதால் நுகர்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தலைமை மாநகர கால்நடை மருத்துவர் முகமது இஜாஸி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், மாட்டிறைச்சியின் அளவு குறைந்து வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.
முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் மாட்டிறைச்சி நுகர்வு அதிகரிப்பதால், மாடுகளை இறைச்சிக்காக இப்போது அறுக்கப்படுவது குறைவு.
இதேவேளை அறுவடை காலத்தில் மாடுகளின் தேவை இருப்பதால் கால்நடைகள் விற்பனை செய்யப்படாமல் இருப்பது மற்றுமொரு காரணமாகும்.
அதற்காக கால்நடைகள் தேவைப்படுவதால், விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது, ஒரு கிலோ மாட்டிறைச்சி ரூபாய் 2,600 முதல் 2,700 வரை விற்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார்.