இலங்கை

சாரதிகளுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

Published

on

மலைப்பாங்கான பகுதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்றது.

இந்தநிலையில், மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.

எனவே மலைப்பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனத்தை செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுங்கள் என வசந்த சேனாதீர அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version