இலங்கை

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையருக்கு மகிழ்ச்சி தகவல் : பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் சன்மானம்

Published

on

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில்(foreign employment bureau) பதிவு செய்யப்பட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டு நாடு திரும்பிய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதாக சிறப்பு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

தொழிலாளி வசிக்கும் பகுதியில் உள்ள இலங்கை(sri lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகக் கிளை அலுவலகம், ஒரு மாணவருக்கு சுமார் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களை வாங்குவதற்கான வவுச்சரை வழங்கும் என்று பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை பிரதேச செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு அலுவலரிடமிருந்து பெறுவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்கள் இரண்டு வழிமுறைகள் மூலம் வழங்கப்படும், 1 முதல் 13 ஆம் வகுப்பு வரை அரசுப் பாடசாலைகளில் படிக்கும் பெற்றோர் தற்போது வெளிநாட்டில் இருந்தால் அவர்களின் பிள்ளைகளுக்கும், 5 வருடங்களுக்கும் குறையாமல் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெற்றோர்களின் பிள்ளைகளுக்கும் ரூ. 10,000 மதிப்புள்ள பாடசாலை பொருட்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும் என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version