இலங்கை
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறையுங்கள்! ராஜித சேனாரத்ன
மகிந்த ராஜபக்சவின் புலம்பலை நிறுத்துவதைப் பற்றி பேசிக் கொண்டிருக்காமல், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க வழிபார்க்குமாறு ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணறும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) புலம்பலை நிறுத்தப் போவதாக கூறிக் கொண்டு திரிகின்றார்.
இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். எனவே முதலில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்க வழிபாருங்கள்.
அதன் பின்னர் மகிந்த ராஜபக்சவின் புலம்பலைக் குறைப்பது பற்றி பார்த்துக் கொள்ளலாம் என்றும் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.