இலங்கை
வட்டி வீதங்களில் ஏற்படவுள்ள மாற்றங்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்
இந்தாண்டு இலங்கையின் பணவீக்கம் மேலும் உயரக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க(Nandalal Weerasinghe) தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை 5 சதவீதத்தில் பேண எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எதிர்மறை பணவீக்க விகிதம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் நேர்மறை நிலைகளை எட்டக்கூடும் என்றும் அவர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் பணவீக்க விகிதம் -1.7 ஆக இருந்தது. இதற்கிடையில், நாட்டின் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.
அதனுடன், சந்தைக்கும் பொதுமக்களுக்கும் வழிகாட்ட ஒரு புதிய மாற்று விகிதம் அறிமுகப்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான பரிவர்த்தனைகளை எளிதாக்க டிஜிட்டல் கட்டண தளத்தை செயல்படுத்த உள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.
பிபிசி வானொலியுடன் இடம்பெற்ற நேர்காணலில் போது இலங்கை மத்திய ஆளுநர் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.