இலங்கை

பெண் ஊழியர்கள் மீது அத்துமீறல்: இறுதியில் நாடாளுமன்றில் மூவருக்கு நேர்ந்த கதி

Published

on

பெண் ஊழியர்கள் மீது அத்துமீறல்: இறுதியில் நாடாளுமன்றில் மூவருக்கு நேர்ந்த கதி

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயத்தை நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக பல கட்ட விசாரணைகளை நடத்திய பின்னர், மூன்று ஊழியர்களும் குற்றவாளிகள் என கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தனவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் பரிந்துரைகளின் அடிப்படையில், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மூன்று ஊழியர்களையும் பணிநீக்கம் செய்ய ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version