இலங்கை

முன்னணி இந்திய திரைப்பட நடிகர் மீது கத்திகுத்து : அதிகாலை நடந்த அதிர்ச்சி சம்பவம்

Published

on

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் (Saif Ali Khan) மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக இந்திய (India) ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவம் இன்று (16.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நடிகர் சைஃப் அலி கானின் வீட்டில் மர்ம நபர் ஒருவர் கொள்ளையிட முயற்சித்துள்ளார்.

இதன்போது நடிகர் சைஃப் அலி கான் அதனை தடுக்க முற்பட்ட போது இந்த கத்திகுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த நடிகர் சயிஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளதுடன் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version