Connect with us

இலங்கை

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது

Published

on

4 11

புத்தாண்டின் முதல் நாடாளுமன்ற அமர்வு இன்று கூடுகிறது

புத்தாண்டின் முதலாவது நாடாளுமன்றம் இன்று (07) கூடவுள்ளதுடன் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, புத்தாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தை (பட்ஜெட் விவாதம்) பெப்ரவரி 17ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையிலான நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர்  வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன (Speaker Dr. Jagath Wickramaratne)தலைமையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு அண்மையில் (31) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியது. இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பு விவாதம் பெப்ரவரி 18ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது.

அதன்பின், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 25ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடைபெறும். 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழு விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு பெப்ரவரி 27 முதல் மார்ச் 21 வரை 4 சனிக்கிழமைகள் உட்பட 19 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பை மார்ச் 21ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்13 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 9.01.2025, குரோதி வருடம் மார்கழி 26, வியாழக் கிழமை, சந்திரன் மேஷம் ராசியில் சஞ்சரிக்கிறார். கன்னி ராசியில் அஸ்தம், சித்திரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது....

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 6 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 6.01.2025 குரோதி வருடம் மார்கழி 22, திங்கட் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். சிம்மம் ராசியில் உள்ள சேர்ந்த மகம், பூரம் நட்சத்திரத்திற்கு...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 5 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 5 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 5.01.2025, குரோதி வருடம் மார்கழி 21 ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 3 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 3 ஜனவரி 2025 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 3.01. 2025, குரோதி வருடம் மார்கழி 19 வெள்ளிக் கிழமை,...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 1 ஜனவரி 2025 – Daily Horoscope Happy New Year: இன்றைய ராசிபலன் 1.01.2025, குரோதி வருடம் மார்கழி 17,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 29 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 29.12.2024 குரோதி வருடம் மார்கழி 14, ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.12.2024, குரோதி வருடம் மார்கழி 11, வியாழக் கிழமை, சந்திரன்...