இலங்கை

ஜனவரி 13ஆம் திகதி சீனா செல்லும் அநுர : பிரமாண்டமான வரவேற்புக்கு ஏற்பாடு

Published

on

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) எதிர்வரும் 13ஆம் திகதி சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், கடந்த மாதம் இந்தியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுர, ஜனவரி மாதம் சீனாவுக்குச் செல்வதை உறுதிப்படுத்தியிருந்தார்.

எனினும், திகதி விவரங்கள் வெளிப்படுத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையிலேயே, ஜனவரி மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 17ஆம் திகதிவரை அவர் சீனாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகளும் சீனாவுக்குச் செல்லவுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது சீன ஜனாதிபதி ஜின் பிங், சீனாவின் பிரதமர், மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் ஜனாதிபதி அநுர சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். முக்கியமான ஒப்பந்தங்கள் சில இதன்போது கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version