இலங்கை

டின் மீன் வாங்குபவர்களுக்கு வெளியான அறிவித்தல்!

Published

on

டின் மீன் வாங்குபவர்களுக்கு வெளியான அறிவித்தல்!

டின் மீன்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் அதிகார சபை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 425 கிராம் டுனா டின் மீன் வகையின் அதிகபட்ச சில்லறை விலை 380 ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மெகரல் வகையான 155 கிராம் டின் மீன் அதிகபட்ச சில்லறை விலையானது 180 ரூபாவாகவும், 425 கிராம் டின் மீன் விலை 420 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜெக் மெகரல் டின் மீன் அதிகபட்ச சில்லறை விலையானது 560 ரூபா எனவும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version