இலங்கை

அர்ச்சுனா – சகாதேவன் கருத்து மோதல் – ஊடகங்களின் அனுமதியை பறித்த அமைச்சர்

Published

on

அர்ச்சுனா – சகாதேவன் கருத்து மோதல் – ஊடகங்களின் அனுமதியை பறித்த அமைச்சர்

இனிமேல் ஊடகவியலாளர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட அபவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அனுமதி இல்லை என யாழ். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் (Ramanathan Arjuna) தம்பிராசா மற்றும் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தம்பிராசாவுக்கு யார் அனுமதி வழங்கியது?

எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது? கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களை ஏன் உள்ளே விடுகின்றீர்கள், தம்பிராசாவை வெளியே அகற்றுங்கள் என அர்ச்சுனா கூறினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சந்திரசேகரன், இனிமேல் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version