இலங்கை

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

Published

on

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கு (Harini Amarasuriya) எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனுவை ருஹுனு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன தாக்கல் செய்துள்ளார்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவில், அரசியல் தேவை காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

துணைவேந்தர் பதவிக்கு தகுதியான அதிகாரியை நியமிப்பதில் நடைமுறை மீறப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, உயர்கல்வி அமைச்சின் செயலாளர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆகியோர் பொறுப்புக்கூற வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version