இலங்கை

பாதாள உலகக் குழு செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு

Published

on

பாதாள உலக நடவடிக்கைகள் மீண்டும் தலைதூக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.

அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜயதிஸ்ஸ, இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்வதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கமாக, பாதாள உலகத்தை அடக்குவதற்கும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கும் தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறுகிய கால அல்லது இரண்டு வார நடவடிக்கைகளை மட்டுமே அரசாங்கம் நம்பியிருக்க விரும்பவில்லை என்றும் பாதுகாப்புப் படையினர் இந்த விடயத்தில் முறையாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்ட நளிந்த ஜயதிஸ்ஸ, அதன் விளைவுகளை எதிர்காலத்தில் காணமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version