Connect with us

இலங்கை

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

Published

on

6 74

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியில் அவர், “இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர்.

துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகில் அவதரித்த இயேசு கிறிஸ்து, ஒருபோதும் ஏழை, பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை.

அதனால் தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார்.

இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வாத பேதங்களை ஒதுக்கி, மனிதநேயத்தின் பெயரால், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும்.

நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம்.

சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம்.

அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் யேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார்.

அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும்.

இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் “வளமான நாடு – அழகான வாழ்க்கையை” உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன்.

சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் , கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம்.

வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதிபூணுவோம்.

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்” என வாழ்த்தியுள்ளார்.

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்11 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christmas

இன்றைய ராசிபலன் 25.12.2024, குரோதி வருடம் மார்கழி 10, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்1 நாள் ago

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 24.12.2024, குரோதி வருடம் மார்கழி 9, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.12.2024, குரோதி வருடம் மார்கழி 7 ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 20.12.2024, குரோதி வருடம் மார்கழி 5 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 19 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 19.12.2024, குரோதி வருடம் கார்த்திகை 4, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 17 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 17.12.2024, குரோதி வருடம் மார்கழி 2, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.12. 2024, குரோதி வருடம் கார்த்திகை 28 வெள்ளிக் கிழமை,...