இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் அலங்காரம் மற்றும் கரோல் பாடல் கச்சேரி

Published

on

கொழும்பு(Colombo) கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் நத்தார் தினத்தை முன்னிட்டு விசேட அலங்காரம் மற்றும் கரோல் பாடல் கச்சேரி என்பன நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

ஜனாதிபதி அலுவலகம், முப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து வருடாந்தம் நடாத்தும் நத்தார் விசேட கரோல் இசை நிகழ்ச்சி, தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையில் கடந்த 22ம் திகதி ஆரம்பமானது.

நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலக வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு இலங்கை இராணுவத்தின் பாடல் குழு மற்றும் இசைக்குழுவினரால் நத்தார் கரோல் கச்சேரி நடத்தப்படுகின்றது.

இன்றைய தினம் (25) மாலை ஏழுமணியளவில் குறித்த நத்தார் கரோல் இசைக்கச்சேரி நிறைவுபெறவுள்ளது.

Exit mobile version